Close
நவம்பர் 23, 2024 1:22 மணி

முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

சோழவந்தான் அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி, செம்மினிபட்டி ஊராட்சி புது காலணி பகுதியில்,150 குழாய் இணைப்புகள் உள்ளது, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இரண்டு மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் ஒரு மோட்டார் கடந்த 20 நாட்களுக்கு முன் பழுதாகி விட்டது. அதனால் ஒரு மோட்டார் மூலம் தினந்தோறும் காலை 9 மணிக்கு மேல் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மேட்டுப்பகுதியில் தண்ணீர் செல்லவில்லை. மேலும் விவசாயக் கூலி வேலைக்கு செல்லும் அந்த பகுதியை சேர்ந்தவர்களால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. இதனால் முறையாக காலை 6 மணிக்கு குடிநீர் வழங்க கோரியும் மின்
மோட்டார் பழுதை சரி பார்க்க கோரியும் இன்று காலை 7 மணிக்கு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை
முருகன், ஏட்டு மாயக்கண்ணன், ஊராட்சி செயலாளர் சரஸ்வதி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top