Close
மே 20, 2024 4:23 மணி

செங்கம் ஸ்ரீநிவேதா மெட்ரிக் பள்ளியில் மகளிர் தினவிழா

ஸ்ரீநிவேதா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மகளிர் தினவிழா கொண்டாட்டம்.

செங்கம் அருகே உள்ள ஸ்ரீநிவேதா மெட்ரிக் பள்ளியில் இன்று  சர்வதேச மகளிர் தின விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக  என். குமரன் பங்கேற்றுப் பேசினார். மேலும், பள்ளியின் தாளாளர், செயலர்கள், நிர்வாக இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவில் மகளிரின் பெருமையையும் சிறப்புகளையும் பள்ளியின் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் இவ்விழாவில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் 2023-24 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையால் செங்கம் வட்டார அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல், திருவண்ணாமலை யோகா கூட்டமைப்பு நடத்திய, யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், செங்கம் லயன்ஸ் கிளப் நடத்திய ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இவ்விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top