Close
டிசம்பர் 27, 2024 7:10 காலை

சென்னைக்கு மீண்டும் மீண்டும் மழை கிடைக்கும்..!

மழை -கோப்பு படம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 11 மணிக்கு லேசான தூறல் ஆரம்பித்திருக்கிறது.

மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் தகவலில், இன்று தொடங்கி நாளை வரை பெய்யும் மழையை மக்களே நன்கு அனுபவித்துக் கொள்ள வேண்டும். வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னையில் மிகக் குளிரான ஒரு இரவு கிடைக்கப்பெற்றது.

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிச. 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நல்ல மழை பெய்தது. சென்னையின் கடற்கரையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் மேகக் கூட்டங்கள் இருக்கின்றன. 11 மணியளவில் லேசான மழை தொடங்கிவிடும் என்று பதிவிட்டுள்ளார்.

சென்னைக்கு இதுவே கடைசி மழையாக இருக்குமா? என்றால் இல்லை. கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பிறகு, 26-27 மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்றும் நாளையும் தான் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கப்போகிறது. பருவமழைக் காலத்தை நன்கு அனுபவித்துக்கொள்ளலாம், இதுதான் குடிநீர் ஆதாரங்களுக்கு அதிக நீர்வரத்தைக் கொடுக்கப்போகிறது என்று பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top