Close
நவம்பர் 21, 2024 9:56 மணி

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி-கோப்பு படம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அரசு செலவினங்களுக்கான எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளது. இது அமெரிக்க நிதிப் பற்றாக்குறையை சரிசெய்யும், அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.25 ஆகக் குறைந்துள்ளது. பின்னர் சற்று நேரத்தில் 84.18 ஆக அதிகரித்தது.

இதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிடலாம் என்று தெரிகிறது.

அதேபோல மெக்சிகன் நாட்டின் பெசோ, ஜப்பானின் யென் மற்றும் யூரோ ஆகியவற்றின் மதிப்புகளும் குறைந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top