Close
நவம்பர் 22, 2024 3:09 மணி

கொத்தமங்கலத்தில்சிறப்பு மருத்துவ முகாம் சுகாதார  விழிப்புணர்வு

புதுக்கோட்டை

கொத்தமங்கலத்தில்நடைபெற்ற மருத்துவமுகாம்

துக்கோட்டை மாவட்டம்   ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் சிறப்பு மருத்துவ சுகாதார  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

   முன்னெச்சரிக்கை  மற்றும் விழிப்புணர்வு  நடவடிக்கையாக மழைக்கால நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கும் பொருட்டு,  கொத்தமங்கலம் பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் அங்கு மக்கள் அதிகமாக கூடும் பகுதியான ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், கடை தெருக்கள் மற்றும் வீடுகள், மாட்டுத் தொழுவங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கவனமாக நோய்க் கிருமிகள் பரவா வண்ணம் தூய்மைப்படுத்தினர்..

கொத்தமங்கலம் கிழக்கு பகுதியில்   பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் திருவரங்குளம் வட்டார நடமாடும்  மருத்துவமனை  மருத்துவக் குழு மற்றும் கொத்தமங்கலம் அரசு மருத்துவமனை செவிலியர்களும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, பொது மக்களுக்கு உடல் இரத்த அழுத்தம்,  இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரை மற்றும் புரத அளவு,  இருதயத் துடிப்பு, மூச்சு விடும் திறன்,  காய்ச்சல்  பரிசோதனை,  கொரோனா பரிசோதனை செய்து  மருந்து மாத்திரைகள் வழங்கியும் மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் பரிந்துரை வழங்கினர்.

புதுக்கோட்டை

முகாமில் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும்  நிலவேம்பு கசாயம் மருத்துவக் குழுவினர் வழங்கினர்.   சுகாதாரப் பணியாளர்கள் கொத்தமங்கலம்   கிழக்கு பகுதியில் வீடு வீடாக சென்று  சுகாதார  விழிப்புணர்வு கருத்துகளை கூறினார்கள்

அதில்  மழைக்காலம் என்றாலே பெரிதும் பரவும் நோய் மலேரியா. இந்த வகைக் கொசுக்கள் தண்ணீர்  தேங்கும் இடத்தில் இனப்பெருக்கமாகிறது.  மலேரியாவுக்கு அடுத்தபடியாக, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி” இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. இதனால் வீட்டை சுற்றி தேங்கும் நீர்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.மழைக்காலத்தில் டான்சில் மற்றும் சைனஸ் நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் தினமும் உப்பு கலந்த  நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்  .வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும்.   வீட்டைச் சுற்றி நடப்பதாக  இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது.. தண்ணீரை கொதிக்க வைத்து பருகி, சுத்தமான, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்ந்தால் பெரும்பாலான நோய்களை தடுத்து விடலாம்.

எனவும் சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு கருத்துகளை கூறினார்கள்   மழைக்கால முன் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய  சுகாதாரப் பணியாளர்களையும்      பொதுமக்கள் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top