Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

கனமழையால் ஈரோடு அருகே நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது..

ஈரோடு

ஈரோடு அடுத்த 46 புதூர் கருக்கம்பாளையம் காலனி பகுதியில் 100 மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு

ஈரோடு அடுத்த 46 புதூர் கருக்கம்பாளையம் காலனி பகுதியில் 100 மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளநீர் புகுந்து சேதம் விளைவித்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நேற்று இரவு மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாகவும் அப்பகுதியில் செல்லும் பெரும் பள்ளம் வாய்க்கால் மற்றும் கீழ்பவானி கிளை வாய்க்கால்கள் பாசனத்திற்காக தண்ணீர் செல்கிறது.

ஈரோடு
வெள்ளம் சூழந்த ஈரோடு 46 புதூர் கருக்கம்பாளையம் காலனி

இந்நிலையில் கன மழை பெய்ததால்  மழை நீரும் கலந்ததால் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்  கரையோரம் உள்ள கருக்கம்பாளையம் காலனி பகுதியில் உள்ள 100 க்கும்  மேற்பட்ட வீடுகளுக்குள்  வெள்ளநீர் புகுந்தது.

இதனால் வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில்  மேற்கொண்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top