புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் வகையில் பணி விதிகளில் வேண்டிய திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில். மாவட்ட இணைச் செயலாளர்.ஜே.லாசர், மாவட்டப் பொருளாளர் க.செந்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டுராஜன், மாவட்டத்துணைத் தலைவர் சுபாஷினி, அறந்தாங்கி ஒன்றியத்தலைவர் குமார்.
அன்னவாசல் ஒன்றியத்தலைவர் அ.ரவிச்சந்திரன், பொன்னமராவதி ஒன்றியத் தலைவர் ஆண்டியப்பன், திருவரங்குளம் ஒன்றியத்தலைவர் சசிக்குமார், மணமேல்குடி ஒன்றியத்தலைவர் ஆரோக்கியம், விராலிமலை ஒன்றியத் தலைவர் செ.ரவிக்குமார், .மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர் ஜீவன்ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் ரங்கசாமி, அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் சு.சுரேஷ், அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் சின்னையா, திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், . மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் ஜெயபாலன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.ஆரோக்கியஅருள்ஜேசுராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் ஆ.பழனிதுரை உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.