Close
நவம்பர் 22, 2024 12:13 காலை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டங்கள் அளவிலான பேச்சு, ஓவியம், கவிதை, பாட்டு, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போட்டிகள் புதுக்கோட்டையில் செப் 3 ஆம் தேதி நடைபெறுகிறது

புதுக்கோட்டை

மகாத்மாகாந்தி பேரவை சார்பில் காந்தி ஜயந்தி விழா போட்டிகள் அறிவிப்பு

அக்.2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்டங்கள் அளவிலான பேச்சு, ஓவியம், கவிதை, பாட்டு, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போட்டிகள் புதுக்கோட்டையில் செப்டம்பர், 3 ஆம் தேதி நடைபெறுகிறது என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை அறிவித்துள்ளது.

அக.2.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் நடக்கும் “காந்தியத் திருவிழா 2022” யையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சு, ஓவியம், பாட்டு, கவிதை, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போட்டிகள் செப்டம்பர்  3 -ஆம் தேதி புதுக்கோட்டையில்; நடைபெறுவதாக பேரவையின் நிறுவனர் முனைவர் வைர.ந. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:காந்தி ஜெயந்தியை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை ஆண்டுதோறும் “காந்தியத்திருவிழா”வாக கொண்டாடி வருகிறது. அதற்கென ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டியும், மாவட்டங்கள் அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்தி வருகிறது.
​அதன்படி, நிகழாண்டுக்கான போட்டிகளில் முதற்கட்டமாக மாநில அளவிலான கட்டுரைப் போட்டி ஏறகெனவே .அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக மாவட்டங்கள் அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக் கான பேச்சு, ஓவியம், பாட்டு, கவிதை, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போன்ற போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 3 -ஆம் தேதி சனிக்கிழமை  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு ராணியார் மகளிர்; மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

போட்டிகளின் விவரங்கள்:
பேச்சுப்போட்டி 6,7,8 வகுப்புகளுக்கு : நாமும் காந்தியாவோம்!
9,10,11,12; வகுப்புகளுக்கு: காந்தி விரும்பிய பெண் கல்வியும் பெண்கள் பாதுகாப்பும்
கல்லூரிக்கு : ஊழலற்ற, மதுவற்ற, சாதி,சமய பேதமற்ற சமத்துவ தேசம் அமைத்து பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!  என்ற தலைப்புகளிலும்
கட்டுரைப்போட்டி: 6,7,8 வகுப்புகளுக்கு : சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு. 9,10,11,12; வகுப்புகளுக்கு : மது, போதைப் பொருட்களற்ற தமிழகம் உருவாக மாணவர்களின் பங்கு.
கல்லூரிக்கு : சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மக்களின் சுமைகள் குறையாமல் இருப்பதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும். என்ற தலைப்பகளிலும் நடைபெறும்
கவிதைப்போட்டி: அனைவருக்கும் பொதுவானது, போட்டிக்கு 10 நிமிடம் முன்னதாக தலைப்பு தரப்படும்
பாட்டுப்போட்டி: அனைவருக்கும் பொதுவானது : காந்திய பாடல்கள்-தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள் மட்டும் (சுயமாக எழுதியதாகவும் இருக்கலாம்)
ஓவியப்போட்டி : அனைவருக்கும் பொதுவானது : காந்தி மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்த காட்சிகள்
குழு நடனப் போட்டி : 5 முதல் 10 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். காந்திய, தேசிய, சமூக விழிப்புணர்வு பாடல்கள். நேரம்: 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குழு நாடகம் : 5 முதல் 10 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். காந்திய , தேசிய, சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் மட்டும். நேரம் : 15 நிமிடங்கள்
குறிப்பு: ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு பள்ளி மற்றும்; கல்லூரியின் சார்பில் மேற்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கபட்ட மாணவ, மாணவியரில் ஒவ்வொரு போட்டிக்கும் இருவரை மட்டும் (குழு நடனம் மற்றும் குழு நாடகத்திற்கு ஒரு குழு மட்டும்) தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்க செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
விதிமுறை: போட்டிகளில் பங்கேற்போர் பள்ளி தலைமையா சிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதிக்கடிதம் பெற்று வர வேண்டும். போட்டி முடிவுகள் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
மாறுவேடப்போட்டி : காந்தி வேடம் மட்டும் 02-10-2022 அன்று காலை 9 மணியளவில் புதுக்கோட்டை காந்தி பூங்காவில் நடைபெறும்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ் களும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் 02-10-2022 அன்று மாலை புதுக்கோட்டை நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரிகள்,பள்ளிகள் தங்களின் பங்கேற்பை முன்னதாக 94434-88752, 04322-222337 ஆகிய எண்களிலோ அல்லது அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை, 3473 – 1 தெற்கு 2 -ஆம் வீதி, புதுக்கோட்டை – 622001 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது gandhiperavai@gmail.com  என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94434 88752 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ தெரிவிக்கலாம் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top