Close
நவம்பர் 22, 2024 9:40 காலை

முதலமைச்சர் விழாவுக்கு அழைப்பு இல்லை… ஈரோடு மாமன்ற உறுப்பினர்கள் புகார்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டம்

முதலமைச்சர் விழாவுக்கு அழைப்பு இல்லை ஈரோடு மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் கடந்த 26 -இல் அரசு விழாவில் பங்கேற்றார். அதில் ஈரோடு மாநகராட்சி திட்டங்கள் பலவற்றை துவக்கி வைத்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை கோவை மாநகராட்சியில் முதல்வர் பங்கேற்ற விழாவுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது என்று  ஈரோடு மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சபூராமா ஜாபர் சாதிக் புகார் தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்துக்கு மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில தலைமை பொறியாளர் மதுரம்  உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ்: முதலமைச்சர் வருகை குறித்து திமுக கழக வார்டு மற்றும் மண்டல தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என காங்கிரஸ் உறுப்பினரின் புகாருக்கு பதில் அளித்தார். அப்போது சில உறுப்பினர்கள் முதல்வர் கலந்து கொண்டது அரசு விழா எனவே மாநகராட்சி உறுப்பினர்களை விழாவுக்கு அழைத்திருக்க வேண்டும் என்றனர்.

புதுக்கோட்டை
ஈரோட்டில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள்

பின்னர் உறுப்பினர்கள் பேசியதாவது:  ஈரோட்டில் கனி ஜவுளி மார்கெட் புதிய கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். அதை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் மார்க்கெட் மூலம் வியாபாரிகள் பயனடைவார்கள். ஜி எச் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்படும் வண்டிகளுக்கு மாநகராட்சி வரி வசூலிக்க வேண்டும். செப்டம்பர் எட்டாம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. எனவே அதை சுற்றி உள்ள பகுதி.தூய்மைப்படுத்த வேண்டும் .சாலைகள் பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

உறுப்பினர்களின்  கோரிக்கைகளுக்கு மேயர் மற்றும் அதிகாரிகள் அளித்த பதில்:  பெரியார் பிறந்த நாளில்   ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் பெரியார் உருவப்படம் வைக்கப்படும்.

மண்டல தலைவர்கள் இனி மண்டல கூட்டங்கள் நடத்தலாம். அரசு மானியம் கிடைத்தவுடன் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான ஹிட்டாச்சி இயந்திரம் நீர்நிலைகளை தூர்வார வாங்கப்படும்.  அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை உறுப்பினர்களுக்கு மார்ச் இறுதியில் வழங்கப்படும்.

நடப்பு நிதி ஆண்டின் நிதிநிலை அறிக்கை தேவை என்றால் உறுப்பினருக்கு வழங்கப்படும். மழை நீர் சில இடங்களில் பாதாள சாக்கடையில் புகுந்ததால் சில பகுதிகளில் கழிவுநீர் வெளியேறியது. மழை நீர் பாதாள சாக்கடையில் சேரும் இடம் கண்டறிந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகரில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நாய்களுக்கு அனிமல் வெல்சர் போர்டு கூறியபடி கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும் ஆனால் அரசு விதிப்படி அதற்கான அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவன கண்காணிப்பின் மூலம் அப்பணியை செய்ய வேண்டும்.

எனவே தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்படும். தற்போது ஒரு அறுவை சிகிச்சை கூடம் உள்ளது. தேவை என்றால் கால்நடை மருத்துவமனை மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி உதவியுடன் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு தூய்மை பணியில் அதிக தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top