Close
நவம்பர் 22, 2024 1:06 மணி

புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் பணிமனை கட்டிடப்பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு ஐடிஐ-ல் புதிய பணிமனை வளாகத்துக்கு பூமி பூஜை செய்த சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனை கட்டடம் கட்டுமான பணிகளுக்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், முன்வடிவமைக்கப்பட்ட பணிமனைக் கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி   (02.09.2022) பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.

பின்னர்  அமைச்சர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர்  ஏழை, எளிய மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்ந்த தரத்தில் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், வகுப்பறைகள், மாணவ, மாணவிகள் விடுதிகள், கழிவறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனைக் கட்டடம் கட்டுமானப் பணிகள் பூமிபூஜை செய்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகமானது 10,520 சதுரஅடி பரப்பளவில் பணியாளர் அறை, வீடியோ செயற்கைகோள்; வகுப்பறை, இணையதள வகுப்பறைகள், செயல்முறை மதிப்பு பகுப்பாய்வு வகுப்பறைகள், பவர் டெவலப்மென்ட் வகுப்பறைகள், இயந்திர பகுதி மற்றும் ஆண், பெண் கழிவறைகள் இக்கட்டடத்தில் அமையப்பெற உள்ளது.

இவை அனைத்தும் உயர்ந்த தரத்தில் உரிய காலத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் சுகுமாரன்.

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், உதவி செயற் பொறியாளர் சிந்தனைசெல்வி, உதவிப்பொறி யாளர் பாஸ்கர், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர், ஒப்பந்ததாரர் ரவிசங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top