Close
செப்டம்பர் 20, 2024 6:38 காலை

தலித்துகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசிக எம்பி ரவிகுமார் வலியுறுத்தல்

விடுதலைச்சிறுத்தைகள்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார்

தலித்துகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  மக்களவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக பொதுச்செயலரும் மக்களவை உறுப்பினருமான  துரை.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் தலித் மக்களின் வாழ்நிலை உயா்கிறதோ, இல்லையோ, அவா்கள் மீதான வன்கொடுமைகளின் எண்ணிக்கை மட்டும் ஒவ்வோா் ஆண்டும் உயா்ந்துகொண்டே செல்கிறது.

இதற்கு சான்றாக தேசிய குற்ற ஆவண மைய (என்சிஆா்பி) அறிக்கைகள் உள்ளன. 2021-ஆம் ஆண்டுக்கான ‘கிரைம் இன் இந்தியா‘ அறிக்கை இப்போது வெளியாகியிருக்கிறது.

தலித்துகளுக்கு எதிராக 2019-இல் தேசிய அளவில் 45 ஆயிரத்து 876 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்திருந்தன. அது, 2020-இல் 50 ஆயிரத்து 202-ஆகவும், 2021-இல் 50 ஆயிரத்து 744-ஆகவும் உயா்ந்துள்ளதாக  என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய அளவில் மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும் அதுதான் நிலை. தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக 2019-இல் 1,144 குற்றங்கள் நடந்திருந்தன. அது, 2020-இல் 1,274-ஆகவும், 2021-இல் 1,377-ஆக அதிகரித்திருக்கிறது.

2020 -இல் மட்டும் தமிழ்நாட்டில் 68 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இது, தென்னிந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமாகும். 2021-இல் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இதேபோல, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன.

என்சிஆா்பி அறிக்கையை தமிழ்நாடு அரசு அலட்சியப்படுத் தாமல் முக்கியத்து வமாக கருதினால், அடுத்து கூட்டப்படும் மாநில அளவிலான விழிப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டத் தில் இந்த அறிக்கையை வைத்து விவாதித்து, வன்கொடுமை தொடர்பான குற்றங்களைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த  அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top