Close
செப்டம்பர் 20, 2024 7:01 காலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் ரூ.49.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் மெய்யநாதன்  திறப்பு

புதுக்கோட்டை

பெரியநாயகிபுரத்தில் ரூ.8.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியை இயக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் ரூ.49.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். மேலும் புதிய திட்டப் பணிகளைபூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ரூ.49.63 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது;

தமிழக முதல்வர்  பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், இசுகுப்பட்டி ஊராட்சி செம்படவயல் சித்திவிநாயகர் கோவில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம்.

பெரியநாயகிபுரத்தில் ரூ.8.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 63 கேவிஏ மின்மாற்றி, பாச்சிக்கோட்டை ஊராட்சி எம்.ராசியமங்களத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் நொண்டி கோவில் ஆதிதிராவிடர் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 500 மீட்டர் நீளத்திற்கு ரூ.11.80  லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மெட்டல் சாலைப் பணி.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீழாத்தூர் ஊராட்சி ஜீவாநகர் பகுதியில் 15 -ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் என ஆகமொத்தம் ரூ.49.63 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் குழந்தைகளின் மீது மிகுந்த அக்கரைகொண்டு, குழந்தைகளுக்கு ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்கள் கிடைத்திடும் வகையில், ஆரம்ப கல்வி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கவுள்ளார்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இத்தகைய அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், ஒன்றியக்குழுத் தலைவர்கள் மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), வருவாய் கோட்டாட்சியர்கள் கருணாகரன் (பொ) (புதுக்கோட்டை), சொர்ணராஜ் (அறந்தாங்கி), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, செயற்பொறியாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top