Close
மே 23, 2025 3:40 மணி

புதுக்கோட்டை  புதுத்தெரு அண்ணா நகர் கற்பக விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேகம்  

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதுத்தெரு கற்பகவிநாயகர் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்

புதுக்கோட்டை    புதுத்தெரு அருகிலுள்ள   அண்ணா நகரிலுள்ள  கற்பக விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேகம்    சிறப்பாக    நடைபெற்றது.

புதுக்கோட்டை புதுத்தெரு அருகிலுள்ள   அண்ணாநகரில்  கற்பக விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேகம்     நடைபெற்றது.

 கும்பாபிஷேக  விழாவையொட்டி தெற்கு 4 -ஆம் வீதி ஆஞ்சநேயர் திருக்கோவிலிலிருந்து அனுமன் திருச்சபை ஆனந்த் ஸ்பதி குமரிஆனந்தன் மற்றும்  குழுவினர், அண்ணா நகர்  பொது மக்கள்  பரிவார தெய்வங்களை சிறப்பு பூஜையுடன் எடுத்து வந்தனர்.

 அண்ணா நகர்  கற்பக விநாயகர்  கோவில்  யாக சாலையில் மணிகுருக்கள் ரவிகுருக்கள் முன்னிலையில்    யாக பூஜை தொடங்கியது.   பின்னர்    நவக்கிரக ஹோமம்,கோபூஜை மகாலட்சுமி ஹோமம்,  மஹா  பூர்ணாஹுதியும், தீபாராதனை, நடைபெற்றது .

தொடர்ந்து ,  யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமானம், மூலாலயம் சேர்ந்தது மணி குருக்கள் முன்னிலையில்  கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு  சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் மூலவர்  கற்பகவிநாயகர் , பரிவார தெய்வங்கள் பாலமுருகன், நாகர்,  தெட்சிணாமூர்த்தி  சுவாமிகளுக்கு கலச புனித நீர் அபிஷேகம் தீபாராதனை  நடந்தது.  பின்னர்   கற்பக விநாயகர்  மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரசிய கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறுத்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவர்கள்,  மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அண்ணா நகர்  பொது மக்கள் இளைஞர்கள் மகளிர் குழுவினர்   பக்தர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை  பகுதிகளிலிருந்து  பக்தர்கள்   வருகை தந்து வழிபட்டனர்.  அனைவருக்கும்அன்னதானபிரசாதம்   வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை அண்ணா நகர்  பொது மக்கள் இளைஞர்கள் மகளிர் குழுவினர்சிறப்பாக செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top