ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதியில் 124 பயனளிகளுக்கு வீடுகள் ஒதுக்கிட்டுஆணைகளை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி வழங்கினார்.
பின்னர் அவர்கூறியதாவது ஈரோடு பெரியார் நகர் பெரும்பள்ளம் ஓடை கருங்கல்பாளையம் பகுதிகளில் 1983- 84 ஆம் ஆண்டு குடிசை வாழ் மக்களுக்காக கட்டப்பட்ட 1072 குடியிருப்புகள் பழுது அடைந்த காரணத்தால் அவற்றை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.
வீடுகளின் மதிப்பு தலா ரூபாய் 9.72 லட்சம் பயனாளிகளின் பங்களிப்பு 1.25 லட்சம். மீதத்தொகை அரசு மானியம். ஆனால் பயனாளிகளின் கோரிக்கையை அடுத்து பங்களிப்பு தொகை ஒரு லட்சம் என குறைக்கப்பட்டது.
அத்தொகையும் 20 ஆண்டுகளில் மாதம் ரூபாய் 883 என பெற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி 29 பயனாளிகள் முழுமையாக ஒரு லட்சம் செலுத்தி உள்ளனர். 274 பயனாளிகள் தவணை முறையில் செலுத்தியுள்ளனர். கு டியிருப்புகள் ஏற்கெனவே இருந்த பழைய குடியிருப்புகளின் கதவு எண் படி புதிய குடியிருப்புகள் ஒதுக்கப்படுகின்றன.
முதல் கட்டமாக கருங்கல் பாளையம் திட்ட பகுதியில் உள்ள 272 குடியிருப்புகளுக்கான பங்களிப்பு தொகை செலுத்திய 124 பேருக்கு ஒதுக்கிட்டு ஆணைவழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் முத்துசாமி. நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தின சுப்பிரமணியம் கவுன்சிலர்கள் மற்றும் வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.