Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

நூற்றாண்டு கண்ட மன்னர் அரண்மனையில் நூற்றியோரு பாரதிகள் அணிவகுப்பு

புதுக்கோட்டை

பாரதியின் 101 வது நினைவு நாளையொட்டி 101 பாரதி வேடமணிந்து வந்த வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசளித்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. உடன் பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மகாகவி பாரதியின் 101வது நினைவு நாளை முன்னிட்டு 101 பாரதி வேடமணிந்து சென்று மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவிடம் பாரதியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நூற்றாண்டு கண்ட மன்னரின் அரண்மனையில் 101 மழலை பாரதிகளும் அணி வகுத்து வலம் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்களைச் சந்தித்து பாரதியார் பாடல்கள் பாரதியார் கவிதை, பாரதியார் வரலாறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதுபற்றி பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறியதாவது: “எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கருத்தை தலைமேற்கொண்டு செயல்பட்டு, சமீபத்தில் சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்ற வாய்ப்பு மறுக்கப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த சேந்தாங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் தமிழரசனா தன் முன்னிலையில் கொடி ஏற்ற வைத்து ஆட்சியர் மிகச்சிறந்த பாராட்டைப் பெற்றார்.

புதுக்கோட்டையின் புதுமைப் பெண்ணாக வலம் வருகின்ற அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியிலும் சிறப்பாக செயல்படுகின்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் எம் பள்ளியின் 101 பாரதிகள் வேடமணிந்து அணிவகுத்து வந்திருந்தனர்.

இதுபோல தேசியத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களை குழந்தைகளைக் கொண்டாட வைப்பதன் நோக்கம் அவர்களுக்கு தேச விடுதலைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் போராடிய சமூக நீதி காத்த தலைவர்களின் வரலாறுகளை அறியச் செய்வதே ஆகும் என்றார் தங்கம்மூர்த்தி. பாரதி வேடமிட்ட பள்ளிக் குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் அன்போடு வரவேற்று வாழ்த்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top