Close
நவம்பர் 22, 2024 4:54 காலை

ஸ்டான்லி மருத்துவமனையில் பேட்டரி கார்கள் சேவையில் குறைபாடு ஏதும் இல்லை

சென்னை

ஸ்டான்லி மருத்துவமனையில் இயங்கப்படும் பேட்டரி வாகனம்

 சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் பேட்டரி கார்கள் சேவையில் குறைபாடு எதும் இல்லை கல்லூரியின் முதன்மையர் டாக்டர் பி பாலாஜி புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம்  புதன்கிழமை வெளியிட்ட தகவல்:

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி கார்கள் இயங்கவில்லை என நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இச்செய்தி உண்மைக்கு புறம்பானது.  ஸ்டாலின் மருத்துவமனையில் 12 பேட்டரி கார்கள் உள்ளன.

இதில் ஏழு பேட்டரி கார்கள் முழுமையாக நோயாளிகளின் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.  அவசர சிகிச்சை,  பொது அறுவை சிகிச்சை பிரிவுகளில் தலா 2 பேட்டரி கார்களும்,  குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை,  உயர் சிகிச்சை, கல்லீரல் குடல் நோய் சிகிச்சை பிரிவுகளில் தலா ஒரு பேட்டரி காரும் இயக்கப்பட்டு வருகின்றன.

  பத்து ஆண்டுகளுக்கு முன்பு அன்பளிப்பாக பெறப்பட்டு தற்போது முற்றிலுமாக செயல்படாத நிலையில் 3 பேட்டரி கார்களை முழுமையாகச் பழுது பார்த்து சீரமைத்து மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இது போன்று பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதனால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் பேட்டரி கார்களையும், மின் தூக்கிகளையும் இயக்குவதற்கு அந்தந்த துறை தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பழுது ஏதேனும் ஏற்பட்டாலோ அல்லது ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலோ எவ்வித சுணக்கமும் இன்றி விரைவாக முடிவெடுக்க முடியும். இதனால் நோயாளிகளுக் கான சேவையில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.  சேவையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக முதன்மையர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top