Close
நவம்பர் 21, 2024 11:59 மணி

கவிதைப்பக்கம்… இங்கிலாந்து ராணி எலிசபெத்…

எலிசபெத்

கவிதைப்பக்கம் மருத்துவர் மு. பெரியசாமி

எலிசபெத்… எலிசபெத்..

நேரம்
யாருக்காவும் காத்திருப்பதில்லை
ஒரு சாம்ராசியத்தின்
தலைவியை
தனதாக்கிக்கொண்டது
இயற்கை!
அறிவியலின்
எல்லையை
அது உணர்த்துகிறது!

வைரங்கள்
வைடூரியங்கள்
நவரெத்தினங்கள்
வாழ்ந்து பார்த்தன!
இருந்த இடத்தை
இழந்தனவா!
இல்லை இல்லை….
இனி ஒரு இடத்தைநோக்கி
நகரும்
நாளை
மீண்டும் அரியணையில்!

தேம்ஸ் நதி
தேடிக்கொண்டிருக்கிறது!
இல்லை இல்லை
வாடிக்கொண்டிருக்கிறது…….
ஒரு நூற்றாண்டின்
ஞாபகங்கள்
அதில்
அல்லவா
ஓடிக்கொண்டிருக்கிறது!

மணி மகுடம்
மகாராணியை தேடுகிறது
அரண்மனையின்
அத்தனை கதவுகளையும்
அவசரம் என்று
சாடுகிறது
எழுபது ஆண்டுகள்
இருந்த இடம் நோக்கி
ஓடுகிறது
எழுந்து வர
ஆலயம் சென்று
பிரார்த்தனை செய்கிறது!

அம்மாவின்…….
அழகான சிரிப்பு
அதிராத நடை
கூர்ந்த கணிப்பு
குலம் காத்த சிறப்பு
இது
மனித குலத்திற்கு
மாறாத மதிப்பு

வானம்
அழுகிறது
ஆம் ….
ஆனால்……. இல்லை!
பூமாரி பொழிகிறது!
வாயிலை திறந்துவைத்துக்கொண்டு
வாசலில்
தேவதைகள்
வரவேற்க!

பிரார்தனைகளோடு
ஒரு பிரியாவிடை……
ஆட்கொள்ள
ஆண்டவனின் வருகை,
அரண்மனையிலிருந்து
ஆகாயம்வரை
அணிவகுப்பு,
தேவனின் அரவணைப்பில்
தேவதைகளோடு வரும்
தேவிக்கு
மீண்டும் ஒரு
சிம்மாசனம்!

மருத்துவர் மு.பெரியசாமி , புதுக்கோட்டை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top