Close
நவம்பர் 25, 2024 9:08 மணி

உளவியல் ஆலோசனைக்கு தனி ஆசிரியர் … மாவட்டத்தில் முன்னோடியாக அசத்தும் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி…!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உளவியல் ஆலோசனை முகாமில் பங்கேற்ற ஆசிரியர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதன் முறையாக உளவியல் ஆலோசனைக்கென்று தனி ஆசிரியரை நியமித்து அசத்தியுள்ளது புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து மனநலமேம்பாட்டு பயிற்சி வழங்கி வரும் பள்ளியாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்குவாரந்தோறும் மாணவர்களுக்கும், மாதந்தோறும் ஆசிரியர்களுக்கும் தேவைப்படும் போது பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்குவதோடு, ஆலோசனைக்கென்று தனி அறையும் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிகவனம் செலுத்தப்படுகிறது

அந்தவகையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மனநல மேம்பாட்டு பயிற்சி  முகாம் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

பள்ளியின் உளவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மிகுந்த பணி அனுபவம் உடைய மனநல ஆலோசகர் யு. மார்ட்டின் கலந்து கொண்டு   ஆசிரியர்களுக்கு மனநல மேம்பாட்டு பயிற்சியளித்தார்.

மனநல ஆலோசகர் மார்ட்டின் ஆசிரியர்களுக்கு மனநல மேம்பாட்டு பயிற்சி அளித்த போது

பயிற்சியின்போது “மனநலம்மற்றும் உடல்நலம் பேணுவதன் அவசியம்,வகுப்பறையில் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய வகுப்பறைமேலாண்மை, சமூகத்திற்குஆசிரியரின் பங்களிப்பு” மற்றும் “ஒருமாணவனின் நல்ல குணங்களை செதுக்கும் ஆரம்பப் புள்ளியாக வகுப்பறையும் ஆசிரியர்களுமே இருக்க வேண்டும்.

ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவு என்பது கனிவோடும் அன்போடும் அமைய வேண்டும்”என்று ஆசிரியர்களுக்கு  அறிவுறுத்தினார்.

முன்னதாக ஆசிரியர் கணியன் செல்வராஜ் வரவேற்றார். துணைமுதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், சபரிநாதன், உதயகுமார், சரசு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top