தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு சுய விளம்பரம்தான் காரணம் என்றார் தேசிய குழந்தைகள் நல ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று(11.9.2022) மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற கொண்டிருக்கும் குற்றங்களுக்கும் தொடர்ச்சியாக ஊடகங்களில் பார்க்கலாம்.
தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்து வரக்கூடிய குற்றங்கள் எல்லாமே வித விதமான குற்றங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள், அண்மையில் மதமாற்றக் குற்றம் ஆகியவற்றை பார்க்கிறோம்.
தேசிய குழந்தைகள் நல ஆலோசகர் என்ற முறையில் நான் கூறும் முக்கிய கருத்து குழந்தைகளுக்கான குற்றங்களை தடுக்க முயற்சிக்கும் போது சுய விளம்பரம் தேடுவதை தயவு செய்து குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களில் அதை பதிவு செய்வது, கருத்து சொல்வதில் ஈடுபடும் அரசு சார்ந்த மற்றும் சாராத குழுக்கள் சுய விளம்பர தேடாமல் இருக்க வேண்டும்.
தமிழகம் போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் சுய விளம்பரம்தான். குழந்தைகளுக்கான குற்றங்களை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். அப்படி செய்தால் சந்தோஷப்படக்கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன். பாதிக்கப்பட்ட யாராவது ஒருவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கப்பூர்வமாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்