Close
நவம்பர் 22, 2024 12:29 மணி

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணி: பூமி பூஜையுடன் அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

திருமயம் தொகுதி தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (14.09.2022) பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.291.30 இலட்சம் மதிப்பீட்டில் 56 நான்கு வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளும் மற்றும் 2 தனி வீடுகளும் என ஆக மொத்தம் 58 புதிய வீடுகள் கட்டும் பணிகள்  பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.

இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top