ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில், பெருந்துறை தொகுதிக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் தற்போது நிலவி வரும்
“மிக முக்கியமான பொதுப் பிரச்னைகள் தொடர்பாகவும், அவற்றிற்கு துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் – கோரிக்கை மனுக்களை“, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியிடம் கொடுத்தனர். கொடுக்கப்பட்ட அக்கோரிக்கை மனுக்கள் விவரம்:
(1) கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், விடுபட்ட பகுதிகளான, சென்னிமலை யூனியனில் உள்ளடங்கிய 6 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் தனி குழாய் அமைப்பு கள் ஏற்படுத்தி, குடிநீர் சீராக வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(2) பெருந்துறை தினசரி மார்க்கெட்டில், பேரூராட்சி சார்பாக புதிதாக கட்டப்பட உள்ள வணிக-வளாகம் கட்டுகிற வரை படத்தில், சில மாற்றங்கள் செய்து வியாபாரிகளுக்கும், கூலி தொழிலாளர்களுக்கும் சிரமம் இல்லாமல் திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிகழ்வில் , மாவட்ட கவுன்சிலர் ஏ.வி. பாலகிருஷ்ணன், பெருந்துறை யூனியன் கவுன்சிலர்கள் ஹேமலதா சம்பத், துடுப்பதி நவபாரதி, பார்வதி ராஜ், செந்தில்குமார், அப்புச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சங்கீதா சக்திவேல் (வெட்டையங்கிணறு), சோளி பிரகாஷ் (திருவாச்சி), கண்ணம்மாள் (சின்னவீரசங்கிலி), தமிழரசி பூபதி (கருக்குப்பாளையம்), ஜீவானந்தம் (கந்தாம்பாளையம்), பிரபு (மொரட்டுப்பாளையம்),
கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்தி குமார், பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளை யம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சரண்யா சுரேஷ், பிரபாவதி நல்லசிவம், ஜி.கே. கோகுல்குமார், சுப்பிரமணியம், ராஜேந்திரன், ரேவதி வடிவேல், தமிழரசி மகேஷ், ரேணுகா தேவி, துர்கா தேவி சரவணன், விமலா, அன்புச்செல்வி மற்றும் துரைராஜ், தங்கமுத்து, ராஜேஷ், பிரவீன்குமார்.
ஓசப்பட்டி பொன்னுசாமி மற்றும் முன்னாள் ஈங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஈங்கூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் விஜயா ராசு, மாருதி பிரஸ் மணி, திருமுருகன் மூர்த்தி, பழனிச்சாமி, பத்மநாபன் மற்றும் பெருந்துறை தினசரி மார்க்கெட் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.