Close
நவம்பர் 10, 2024 6:09 காலை

புதுக்கோட்டையில்    சாய்பாபாவின் அகண்ட சகஸ்ரநாம பாராயண வேள்வி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நைனா ராஜு தண்டாயுதபாணி கோயிலில் நடைபெற்ற சாய்பாபா பாராயண வேள்வி

 புதுக்கோட்டையில்      சாய்பாபாவின் அகண்ட சகஸ்ரநாம பாராயண வேள்வி நடைபெற்றது.

உலக வாழ்க்கைப் பந்தங்களிலிருந்து விடுபட்டு இறைவனை நாடும் வழிமுறையை எளிமையாகச் சொன்னதுடன் தன் அற்புதச் செயல்களின் மூலம் தனக்கென தனி பக்தர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் சீரடி சாய்பாபா. இன்று அவர் இல்லாவிட்டாலும், அவர் வாழ்ந்த சீரடியில் இன்னும் பக்தர்கள் கூட்டம் அருளாசி வேண்டி அலை மோதிக் கொண்டுதான் இருக்கிறது.

சாய்பாபாவை இந்துக்களும் இசுலாமியரும் அற்புத மகானாகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர்.

புதுக்கோட்டை மேலராஜவீதியில்  உள்ள  நைனா ராஜு தெண்டாயுதபாணி ஆலயத்தில்   சனிக்கிழமை மாலை சாய்பாபாவின் அகண்ட சகஸ்ரநாம பாராயண வேள்வி நடைபெற்றது .

இந்த நிகழ்வில்  ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று சாய்ராம் நாமம் சொல்லி தங்கள் கரங்களால் மலர்தூவி  அர்ச்சனை செய்து வழிபட்டனர். வழிபாடு ஏற்பாடுகளை ஸ்ரீ கணேஷ் சாய்பாபா விழாக்குழுவினர்   செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top