உலகின் முன்னேற்றத்துக்கு ஏற்ப உயர் கல்வியை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றார் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் மற்றும் விஞ்ஞானி ஆர் செந்தில்குமார்.
ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியின் 17 -ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் 927 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் அவர் பேசியதாவது:
பட்டம் பெற்ற மாணவ மாணவிகளின் 60% பேர் பல்கலைக் கழக தர வரிசையில் முதன்மை பெற்றுள்ளனர் அவர்களில் 12 சதம் மட்டுமே ஆண்கள் பட்டம் பெற்றோர்கள் இனி உலகத்தை தனித்து எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
இதுவரை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுத லின்படி அவர்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். எனவே எப்போதும் அவர்களை மறக்கக்கூடாது. பட்டம் பெறுபவர்கள். மேலும் உயர் கல்வி அல்லது வேலை வாய்ப்பு பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
குறிப்பாக பயோ டெக்னாலஜி துறையில் எதிர்காலத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும் உலகை அச்சுறுத்தும் கொரோனா களத்தில் பயோடெக்னாலஜி துறை மூலம் தடுப்பூசிகளை ஆறு டிகிரி செல்சியசில் பாதுகாத்து மக்களுக்கு செலுத்தினோம் அதனால்தான் ஏராளமான மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
அடுத்த முக்கியத்துறை டேட்டா சயின்ஸ் விண்வெளியில் செலுத்தப்படும் ராக்கெட் முதல் இருசக்கர வாகனம் வரை பொருத்தப்படும் சிப்ஸ் டேட்டா சைன்ஸ் அடிப்படையில் ஆனது சென்னை ஐஐடி -இதற்காக ஆன்லைன் மூலம் இரண்டு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கிறது.
குறைந்தபட்சம் மதிப்பெண் நுழைவு தேர்வில் தேர்வு பெற்றால் போதும் ஓராண்டு சான்றிதழ் இரண்டு ஆண்டு பட்டயம் மூன்றாண்டு பட்டம் 4 ஆண்டு எம்எஸ் டிகிரி பெறலாம் வேலை செய்து கொண்டே அல்லது உயர் கல்வி படித்துக் கொண்டே இந்த படிப்பை படிக்கலாம்.
ஆண்டுக்கு குடும்ப வருமானம் ரூபாய் ஒரு லட்சத்துக்குள் உள்ளவர்களுக்கும் பெண்களாய் இருந்தால் 5 லட்சத்துக்குள் உள்ளவர்களுக்கும், இக்கல்வி ஐஐடி -யால் இலவசமாக வழங்கப்படுகிறது. இதே போன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரந்தர பணியாளர் 2100 பேர் அங்கும் ஆரம்பத் தேர்வு முதன்மை தேர்வு நேர்காணல் மூலம் பொறியியல் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பெறலாம்.
கேட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான கேள்வி அடிப்படையில் இத்தேர்வு நடைபெறும். பொறியியல் படிப்பை எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோம் என்ற ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்களுக்கு அதிகம் வேலை வாய்ப்பு கிடைக்கும். பட்டம் பெற்று செல்பவர்கள் இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார் அவர் பேசினார்.
கல்லூரி தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், தலைவர் கந்தசாமி, பொருளாளர் அருண் மற்றும் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், வேலுமணி, குலசேகரன், நிர்வாக மேலாளர் பெரியசாமி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல்வர் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார். அறிவியல் துறைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.