பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆ. செல்லத்துரை தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சு.கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் மா.ஈசுவரன், மாவட்டச் செயலாளர் ரெ.குமாரசாமி, மாவட்டப் பொருளாளர் குழ.அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர், இணைப் பொதுச் செயலாளர் AIPTF. ந.ரெங்கராஜன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட நிறைவுரை யாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி, நிர்வாகிகள் செ.முனியாண்டி, க.வெண்ணிலா,க.தியாகராஜன், சூ.ம.ரா.ஜோசப் ஹெர்மன், சு.அ.பவுல், இ.சுசிலாராணி, மாவட்டத் துணைத் தலைவர்கள் கா.ஜெய்சங்கர், கோ.இராதாகிருஷ்ணன், ப.முருகன், க.தனபாக்கியம்.
மாவட்டத் துணைச் செயலாளர்கள் ரெ.ராஜமணிகண்டன், க.ரஜினிகாந்த், இரா.நீலாவதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ப.பாப்பு, ம.ரோசாலி, மா.மல்லிகா, மா.ராஜேஸ்வரி, ப.கவிதா உள்ளிட்டோர் பேசினர். மாவட்டத் துணைச் செயலாளர் இல.ந.சிவக்குமார் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ஆ. தவமணி நன்றி கூறினார்.
கோரிக்கைகள்: நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதிய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.
ஒரே நாடு ஒரே கொள்கை என்ற ஏழாவது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உயர்கல்வி இட ஒதுக்கீடு மற்றும் மூவலூர் ராமாமிர்தம் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.