புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் தெற்கு பகுதியில் அரசுப்பள்ளியிலும் மற்றும் அங்கன்வாடி மையத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவரங்குளம் வட்டார நடமாடும் மருத்துவமனை மருத்துவக் குழு அரசு மருத்துவமனை செவிலியர்களும் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் குழந்தைகள், மாணவர்கள் பெரியவர்கள் ஆலோசனை பெற்றுச்சென்றனர்.
பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கும் பொருட்டு, குல மங்கலம் பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் அங்கு மக்கள் அதிகமாக கூடும் பகுதியான பள்ளிக்கூடங்கள், மற்றும் வீடுகள், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து நோய்க்கிருமிகள் பரவா வண்ணம் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.
மேலும் வீட்டை சுற்றி தேங்கும் நீர்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.தண்ணீரை கொதிக்க வைத்து பருகி, சுத்தமான, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்ந்தால் பெரும்பாலான நோய்களை தடுத்து விடலாம் என்று மருத்துவர் குழுவினர் ஆலோசனை தெரிவித்தனர்.