Close
நவம்பர் 22, 2024 10:52 மணி

சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு பேரணி

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16 தினத்தை நினைவு கூறும் வகையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்று நடுதல், ஓசோன் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மன்றம் சார்பில்  அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப் பட்டியில் உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16 தினத்தை நினைவு கூறும் வகையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்று நடுதல், ஓசோன் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் க.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலர் ஆ. வெங்கடேஸ்வரி கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு ஓசோன் பாதுகாப்பு குறித்து பேசினார்.

இந்நிகழ்வினை சுற்றுச்சுழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பா.ஆனந்தராஜ் ஒருங்கிணைத்து பேசியதாவது: உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 16 -ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது .

ஓசோன் படலம் பூமியை எவ்வாறு பாதுகாக்கிறது என்றும், ஓசோன் படலத்தை பாதுகாக்க நாம் குளிர்சாதன உபகரணங்கள் குறைக்க வேண்டும் எனவும், நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட்டு பூமி பாதுகாக்க வேண்டும் எனவும் பேசினார்.

மேலும் மாணவர்களுக்கு ஓசோன் சிறப்பு விநாடி வினா போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கவிதை, விழிப்புணர்வு பாடல்கள்,நடனம், காகிதத்தை சரியாகப் பயன்படுத்தி மரங்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து நாடகத்தை மாணவர்கள் செய்து காண்பித்தார்.

இதையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை சுற்றுச்சூழல் மன்ற தலைவர் லோகேஸ்வரன் செயலாளர் கிரித்திஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில், பிளாஸடிக்கை தவிர்ப்போம்! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மழைநீர் உயிர் நீர் உள்ளிட்ட பதாகை மாணவர்கள் ஏந்திச்சென்றனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் க.மணிமேகலை, அ.ரகமதுல்லா, அ.வெள்ளைச்சாமி,செல்வி ஜாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top