பகத்சிங் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்டத்தில் 75 இடங்களில் உறுதி ஏற்று புதிய உறுப்பினர்களை இணைத்தனர்
மாவீரன் பகத்சிங்கின் 115-ஆவது முன்னிட்டு புதன்கிழமைய புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 மையங்களில் மக்கள் ஒற்றுமை உறுதி ஏற்கப்பட்டதோடு 15 ஆயிரம் இளைஞர்கள் சங்கத்தில் இணைக்கப்பட்டனர்.
சுதந்திரப் பேராட்ட வீரர் மாவீரன் பகத்சிங்சின் 115-ஆவது பிறந்த தினம் நாடுமுழுவதும் புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதனடிப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 மையங்களில் ஒரே நாளில் மக்கள் ஒற்றுமை உறுதி ஏற்கப்பட்டது. மேலும். 75 மையங்களிலும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பகத்சிங்கின் உருவப்பட்டத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.குமாரவேல், தலைவர் எம்.மகாதீர், முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், நகரச் செயலாளர் ஜெகன், முன்னாள் நகரச் செயலளார் ஆர்.சோலையப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ராஜேஸ், குமரேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் எம்.சின்னதுரை எம்எல்ஏ, எஸ்.சங்கர், ஜி.பன்னீர்செல்வன், முன்னாள் ஒன்றியச் செயலளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறந்தாங்கியில் எம்.கோபால் தலைமை வகித்தார். முன்னளர் மாவட்டச் செயலளார் எஸ்.கவிவர்மன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவரங்குளம் ஒன்றியத்தில் பி.கனகராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், முன்னாள் ஒன்றியத் தலைவர்கள் எல்.வடிவேல், தரணிமுத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கறம்பக்குடி ஒன்றியத்தில் தினேஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் த.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரிமளம் ஒன்றியத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.சுமதி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.வி.ராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமயத்தில் கார்த்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.