Close
நவம்பர் 22, 2024 9:43 மணி

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் பயிற்சியை தொடக்கி வைத்து பேசுகையில், பள்ளி மேலாண்மை குழு பொறுப்புகளும், கடமைகளும், குழந்தைகளின் உரிமைகள் பற்றியும், கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றியும், குழந்தை தொழிலாளர் தடுத்தல், குழந்தை திருமணம் தடுத்தல்,பள்ளிசெல்லா குழந்தைகள் கண்டறிந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

பள்ளி கட்டமைப்பு தேவையான அடிப்படை வசதிகளை இக்குழுவின் மூலம் ஏற்படுத்த வேண்டும் எனவும் ,பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும்.பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வைப்பது பள்ளி மேலாண்மை குழுவின் பணியாகும்.

ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவின் துணைக் குழுக்கள் முறையே மாணவர் சேர்க்கை மற்றும் தக்கவைத்தல் குழு, கற்றல் முழு, கட்டமைப்பு குழு மற்றும் மேலாண்மை குழு ஆகியவை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இப்பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இலக்கியா, துணைத் தலைவர் து.தேவநாயகி, செயலாளர் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, ஆசிரியர் உறுப்பினர் பா.ஆனந்தராஜ், கல்வியாளர் மருத்துவர் த.சாமிநாதன், உறுப்பினர்கள் ருக்மணி, சரண்யா, பழனிவேல்,கலாராணி, சுஜாதா, தேவி திவ்யா செல்வி, நிர்மலா,சத்யா, ரஞ்சிதா, உள்ளிட்ட உறுப்பினர்களும், இல்லம் தேடிக் கல்வி மையம் ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்ப பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை வெள்ளைச்சாமி செல்விஜாய் ஆகியோர் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top