Close
நவம்பர் 22, 2024 9:26 மணி

புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் நெல்கொள் முதல் நிலையம் அருகே காத்திருக்கும் நெல் மூட்டைகள்

புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் 45 நாட்களுக்கு முன்னதாக  அறுவடை செய்த 20 ஆயிரம் நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே வெள்ளாள விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குலவைப்பட்டி மேலப்பட்டி கழனிப்பட்டி உழவன் தெரு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் வயலில் விலைய வைத்து அறுவடை செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மணிகளை வெள்ளாளவிடுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: சுமார் ஒன்றரை மாதமாக  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு அதிகாரிகள் வந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை .

இதனால் நெல்மணிகள் தினந்தோறும் பெய்யும் மழையில் முளைக்கத் தொடங்கி விட்டதாகவும், நெல்மணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top