புதுக்கோட்டை பழைய அரண்மனை வளாகத்தில் உள்ள அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோவில் நவராத்திரி கலை இசை இலக்கிய விழா நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரதநாட்டியம் மற்றும் வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாட்சிமை தங்கிய புதுக்கோட்டை மாமன்னர் ஸ்ரீ பிரகதாம்பாள் தாஸ் ராஜகோபால தொண்டைமான், ராணியார் சாருபாலா தொண்டைமான், ராஜகுமாரி ராணி ஜானகி மனோகரி ராஜாயி மற்றும் தமிழ் செம்மல் சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
புதுக்கோட்டை நகரத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பல்வேறு திருக்கோயில்களில் கொலு வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன.தினமும் , (26.9.2022 – 5.10.2022) மாலை 6 – 9 கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகின்றது.
திருக்கோகர்ணம் அருள்மிகு பிரஹதாம்பாள் திருக்கோயில். பழைய அரண்மனை அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில். அருள்மிகு சாந்தநாத சுவாமி திருக்கோயில்.அருள்மிகு அரியநாச்சியம்மன் திருக்கோயில்.. அருள்மிகு மனோன்மணி அம்மன் திருக்கோயில். சின்னப்பாநகர் அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்.தெற்கு ராஜ வீதி அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயில் .மேலராஜவீதி அருள்மிகு நைனா ராஜு தண்டாயுதபாணி திருக்கோயில். அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில். சங்கரமடம். நகரத்தார் சங்கம் ஆகிய இடங்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன.