Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

புதுகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சிலம்பம் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சிலம்பப்பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டையில் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை பயிற்சி முகாமில் 300 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
குழந்தைகள் நல குழுமம் புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறை மற்றும் புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சிலம்பம் பயிற்சி முகாம் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி யில் நடைபெற்றது.

பள்ளி விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய வீர கலையான சிலம்பக் கலையை கற்றுக் கொள்ளும் விதமாக ஏழு நாள் பயிற்சி நடைபெற்றது.

இந்த ஏழு நாள் பயிற்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றை கை சிலம்பம், இரட்டை கை சிலம்பம், சுருள்வாள், வண்ண சிலம்பும் என பல்வேறு வகையான சிலம்பக் கலையை ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர். மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் சிலம்பக்கலை பயிற்சி முடித்த மாணவ, மாணவிகள்

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை தாங்கள் கற்றுக்கொண்ட சிலம்பு கலையினை மாணவ மாணவிகள் செய்து காண்பித்து அசத்தினர். பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா புத்தாஸ் வீரக்கலை நிறுவனர்  சேதுகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் திலவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் எம். லியாகத் அலி,  நகர் மன்ற உறுப்பினர்கள் பாரதி சின்னையா, செந்தாமரை பாலு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் கே. மோகன்ராஜ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் வீரமுத்து,  புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு குழந்தைகள் நலக்குழுமம் கே.சதாசிவம், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர நமசிவயம், உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top