Close
நவம்பர் 22, 2024 5:30 மணி

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய புரட்டாசி திருவிழா.

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சென்னை மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி மாத திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதேபோல் இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, அக்.16-ஆம் தேதிவரை நடைபெறும். திருவிழாவினையொட்டி தினமும் திருஏடுவாசிப்பு, பணிவிடை, உச்சிப்படிப்பு,  உகப்படிப்பு உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்திலும், அடுத்தடுத்த நாள்களில் அன்ன வாகனம், செண்டை மேளத்துடன் கருடவாகனம்,  மயில்வாகனம், ஆஞ்சநேயர் வாகனம்,  சர்ப்ப வாகனம், மலர்முகம் சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம்,  பூம்பல்லக்கு உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட  கோயிலைச் சுற்றிலும் அய்யா வைகுண்டர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்க உள்ளார்.

தேரோட்டம்:  விழாவின் முக்கிய நிகழ்வாக 10 நாள் ஞாயிற்றுக்கிழமை, அக்.16 அன்று காலை 11 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் அய்யா அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வீதிவலம் வருவார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். விழாவில்  தமிழகம் முழுவதிலும் இருந்து  அய்யா வழி பக்தர்கள் வந்து கொள்கிறார்கள்.

 விழா நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு மூன்று வேளையும் கோவில் நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப் படுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top