தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏழாவது உலகத் திரைப்பட விழா அக் 14 முதல் 18 வரை புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஏழாவது உலகத் திரைப்பட விழா வருகின்ற அக்டோபர் 14 முதல் 18-ஆம் தேதிவரை புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 தலைசிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
திரையிடலுக்கு நடுவே தினமும் ஒரு திரைப்பட இயக்குனர், ஒரு எழுத்தாளர் பங்கேற்று பார்வையாளர் களுடன் விவாதம் நடத்த உள்ளனர்.
திரைப்பட விழாவிற்கான இலட்சினை (லோகோ) யை கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வெளியிட்டார்.
திரைப்பட வரவேற்புக்குழுத் தலைவர் கிருஷ்ண வரதராஜன், தமுஎகச மாநில துணைத் தலைவர்கள் நா.முத்துநிலவன்,
ஆர்.நீலா, மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன்,
பொருளாளர் கி.ஜெயபாலன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.தனிக்கொடி,
மாவட்ட துணைத் தலைவர் மு.கீதா, துணைச் செயலளார் சு.பீர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்
உலகத் திரைப்பட விழாவையொட்டி புதுக்கோட்டையில் அடுத்தடுத்த மாதங்களில் கவிதை, சிறுகதை, நாவல், ஓவியம், வீதி நாடகங்கள் குறித்து வாசிப்பு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்துவது
என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளது. ஏற்பாடுகளை தமுஎகச நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
உலகத்திரைப்பட விழா புதுக்கோட்டையில் 5 நாள்கள் நடைபெறவுள்ளதையொட்டி, உலக திரைப்படங்களை புதுக்கோட்டை மாவட்ட திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது போன்ற திரைப்பட விழாக்கள் மூலம் தரமான படங்களை ரசிக்கும் அனுபவங்களை புதுக்கோட்டை மாவட்ட ரசிகர்கள் பெறுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்