Close
ஏப்ரல் 5, 2025 11:32 காலை

காரியாபட்டியில் பசுமை பாரதம் அறநிலையம் சார்பில் ஆயிரம் பனை மரங்கள் நடும் திட்டம்

விருதுநகர்

காரியாபட்டி ஒன்றியத்தில் பனை விதை நடும் ஆர்வலர்கள்

காரியாபட்டி ஒன்றித்தில் பசுமை பாரதம் அறநிலையம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

 ரியாபட்டி ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்துவரும் பசுமை பாரதம் அறநிலையம் சார்பாக கிராமங்கள் தோறும் பனைவிதைகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

காரியாபட்டி கல்குறிச்சி குண்டாற்று தடுப்பணை பகுதியில் நடைபெற்ற  பனைவிதைகள் நடும் நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் கல்குறிச்சி கணேசன் , வக்கணாங்குண்டு தேவி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில், தடுப்பணை அமைந்துள்ள ஆற்றின் இரண்டு கரைப் பகுதிகளில் முதற்கட்டமாக 200 க்கு மேற்பட்ட பனைவிதைகள் நட்டுவைக்கப் பட்டது.

பசுமை அறநிலைய நிறுவனர் பொன்ராம் கூறியதாவது:  தமிழகத்தில் அடையாளமாக இருந்த பனைமரங்கள் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரை சேமித்து வறட்சியிலும் நன்றாக வளரும் பனைமரங்கள். மூலம் பல்வேறு பலன்கள் கிடைத்தது.

மண் அரிப்பை ஏற்படாமல் கண்மாய் கரைகளை பாதுகாக்க கூடிய மரம், நமக்கு பயன்தரும் பனைமரங்களை மீண்டும் பயிர்செய் வதற்காக அனைத்து கிராமங்களிலும் ஆற்றுகரைப் பகுதி, குளம், கண்மாய் கரை பகுதியில் பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

தமிழக அரசின் ஊராட்சி , வேளாண்மை , தோட்டக்கலைத் துறை வனத்துறை மற்றும் வருவாய் துறையினரின் உறு துணை யோடு பள்ளி கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப் போடு காரியாபட்டி ஒன்றியத்தில் 5 ஆயிரம் பனைவிதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்  அவர் .

நிகழ்ச்சியில், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top