மதுரையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் போலீசார் ஒரே நாளில் அதிரடியாக பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் வாள் மற்றும் துப்பாக்கி கஞ்சாவுடன் பதுங்கி இருந்த முனீஸ்வரன் என்ற காத்தாடி முனீஸ்( 24), அருண் பாண்டியன் என்ற உருளை அருண்( 32) , சரவணக்குமார் என்ற மட்டக்கம்பு சரவணன் மூவரையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் வைக்கம் பெரியார் நகர் ரோட்டில் சைவம் என்ற சிவா துரை( 27) , சரவணன் என்ற வண்டுசரவணன்(25) , கார்த்திக் என்ற புறா காரத்(22) மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து மூன்று வாள்களையும் அவனியாபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாம்பன் நகர் மொட்டைமுணி அரசு கோவில் அருகே தெற்கு வாசல் போலீசார் நடத்திய சோதனையில் சரத் என்ற சரத்குமார் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கீரைதுறை போலீசார் வாழைத்தோப்பு ரயில்வே கேட் அருகே செல்ல மணி என்ற கூனல் பாபா(25) என்பவரை கைது செய்தனர்.
தெப்பக்குளம் 16 கால் மண்டபம் அருகே தெப்பக்குளம் போலீசார் மாரி செல்வம்(27) என்பவரை கைது அவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் போலீசார் நடத்தி அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியுடன் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.