தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வாயிலருகே நடைபெற்ற வாயில் முழக்கப் போராட்டத்தில் (11-10-2022) பங்கேற்ற விரிவுரையாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை முழக்கமிட்டனர்.
கோரிக்கைகள்: நாங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிசெய்து வருகின்றோம்.
அரசாணை (நி)எண்:56-ஐ பின்பற்றி கௌரவ விரிவுரையாளர் களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
கல்லூரி ஆசிரியர் தேர்வு முறைகளில் எழுத்துத் தேர்வை நீக்கி நேர் காணல் முறையிலேயே நியமனம் செய்ய வேண்டும்.
ஊதிய உயர்வு (ரூ.30,000 சட்டக் கல்லூரிகளில் வழங்குவது போல்) வழங்க வேண்டும். மாநில தகுதித்தேர்வு (TNSET) உடனடியாக நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் போர்கால அடிப்படையில் நிறைவேற்றிட வேண்டி பலகட்ட தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக , தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.