தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தா மல் போனஸ் வழங்க வேண்டுமென ஏஐடியூசி வலியுறுத்தி யுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற் சங்க மாநில பொதுச் செயலாளர் சி. சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிகின்ற பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வழங்கப்படுகின்ற போனஸ் காலத்தில் அறிவிக்கப்படாததால் ஆண்டுதோறும் காலதாம தமாக போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டுகளில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தீபாவளிக்கு முதல் நாளோ அல்லது தீபாவளி முடிந்த பிறகு போனஸ் பெற வேண்டிய மோசமான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே தீபாவளி நெருங்கிக் கொண்டிருக் கின்ற சூழலில் உடனடியாக போனஸ் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிட்டு முன்கூட்டியே போனஸ் வழங்க வேண்டும்.
மேலும் நுகர்பொருள் வாணிபக்கழக பொன்விழா ஆண்டை யொட்டி வழங்கப்படுகின்ற ரூபாய் 1500 ஊக்கத் தொகையை பாகுபாடின்றி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் வழங்கவேண்டும்.
நெல்கொள்முதல் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எடைக்கூலி மற்றும் ஏற்றுக் கூலியை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று நுகர்பொருள் வாணிபக்கழக ஏஐடியூசி சங்க மாநில பொதுச்செயலாளர் சி.சந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.