Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

புதுக்கோட்டையில் மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படம் திரையிடல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தி தியேட்டரில் வைகோ குறித்த ஆவணப்பட திரையிடவ் நிகழ்வில் பேசிய துரை வைகோ

புதுக்கோட்டையில் திரையிடப்பட்ட மாமனிதன் வைகோ என்கிற ஆவணப்படத்தை சுற்று சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மதிமுக தலைமை நிலைய செலாளர் துரை வைகோ ஆகியோர் பார்வையிட்டனர்

புதுக்கோட்டையில் “மாமனிதன் வைகோ” என்கிற ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழக அரசியலில் கோபால்சாமி வையாபுரி என்கிற வைகோ முக்கியமானத் தலைவராக தொடர்ந்து அரசியலில் செயல்பட்டு வருகிறார். வைகோவின் அரசியல் பயணம் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. இருப்பினும், தமிழகத்தின் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்காக வைகோ குரல் கொடுத்திருப்பார்.

 மதிமுக பொதுச்செயலரான வைகோ குறித்த   “மாமனிதன் வைகோ” என்கிற ஆவணப்படம் இன்று புதுக்கோட்டையில் திரையிடப்பட்டது . மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 56 ஆண்டு கால அரசியல் பயணம் குறித்து ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை கடந்த செப்டம்பர் 11 -ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த ஆவணப்படத்தில், வைகோ, அண்ணா, கருணாநிதி, பிரபாகரன், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுடனான அரசியல் பயணம் இடம்பெற்றுள்ளது.

கலிங்கப்பட்டி முதல் டெல்லி நாடாளுமன்றம் வரை வைகோ -வின் 56 ஆண்டு அரசியல் பயணம் மிகவும் நெடியது. திமுகவில் கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் க. அன்பழக னுக்கு பிறகு, ஈர்ப்பு மிக்க தலைவராக உருவெடுத்த வைகோ, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் இருந்துள் ளார். தனது அனல் பறக்கும் பேச்சாற்றாலால் ஏராளமான இளைஞர்களைக் கவர்ந்தார்.

தீவிரமான ஈழ ஆதரவாளராக இருந்த வைகோ, திமுகவில் இருந்து விலகிய 1994 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைத் தொடங்கினார். அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் மதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வைகோ தற்போது, 4-ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

தனது அரசியல் பயணத்தில், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா பிரபாகரன், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைக் கண்டவர்.2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்த வைகோ, திமுக எம்.எல்.ஏ.க்களால் மீண்டும் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இவரது 56 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம், புதுக்கோட்டை சாந்தி தியேட்டரில் இன்று காலை மதிமுக மாவட்ட பொருளாளர் எஸ்.கே.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிமுக தலைமை நிலைய செலாளர் துரை வைகோ  கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில்,  மதிமுகவினர், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்  பங்கேற்று ஆவண படத்தை பார்வையிட்டனர்.

சுற்றுச் சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை,  புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலாவதி செந்தில், நகர்மன்ற துணை தலைவர் எல்.லியாகத் அலி, காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு,

திமுக விவசாய அணி அமைப்பாளர் வி.என்.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி  தர்மராஜன், விசிக மாவட்ட செயலாளர் சுப.பாவாணன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆவணப்படத்தை பார்வையிட் டனர்.

இறுதியில் கவிஞர் தங்கமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். நிறைவில் துரை வைகோ ஏற்புரையாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top