Close
நவம்பர் 26, 2024 2:09 காலை

ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள்-முதியவர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோடு

ஈரோடு இதயம் நற்பணி யக்கம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள்-முதியவர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள்-முதியவர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

 ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளாக கண் தானம், ரத்த தானம் போன்ற மருத்துவ முகாம்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஏழை, எளிய குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் வழக்கம்போல் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கும்நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இதயம் நற்பணி இயக்கத்தின் தலைவர் எஸ்.வி.மகாதேவன் தலைமை வகித்தார். மோனிகா டயாபடிக் சென்டர் நிர்வாக இயக்குநர் டாக்டர் தங்கவேல், எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுடர்வண்ணன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் பங்கேற்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் புத்தாடைகள் வழங்கி துவக்கி வைத்தார். இதில், குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு, காரம், முதியவர்களுக்கு வேட்டி, சேலை போன்றவை வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top