Close
செப்டம்பர் 20, 2024 6:31 காலை

சூரிய கிரகணம்..தமிழ்நாட்டில் மூடப்படாத கோயில்கள்…!

சூரியகிரகணம்

தமிழ்நாட்டில் சூரிய கிரகணம் நடக்கும் நேரம்

சூரிய கிரகணம்..தமிழ்நாட்டில்  கோவில்களில் மூடப்படாமல் நடை திறந்திருக்க காரணம் இதுதானாம்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இந்து கோவில்களில் நடை அடைக்கப்பட்டி ருக்கும் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணங்கள் என்பவை அதிசய நிகழ்வு. சூரிய சந்திர கிரகணங்கள் பற்றி பல புராண கதைகள் இருந்தாலும் அறிவியல் பூர்வமாக சில உண்மைகளும் உள்ளன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைப்பதே கிரகணம் ஆகும்.

அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 04.29 மணி முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது.இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவின் பல பகுதிகளில் பார்க்க முடியும். கிரகணத்தின் போது வெளிப்படும் எதிர்மறை ஆற்றல், கோவிலுக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலைத் தூண்டும். வடிவமைப்பில் உள்ள சிறப்பு ஆற்றலின் ஒளியின் மீது சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கிரகணத்தின் போது அனைத்து கோவில்களின் கதவுகளும் மூடப்படுகிறது.

கோவில்களில் நடை அடைப்பு கிரகணம் நிகழும் நாளன்று கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது. அமாவாசை நாளில் கந்த சஷ்டி விழா பல கோவில்களில் தொடங்குகிறது. மாலை 6.15 மணிக்கு மேல் திறந்து வழக்கமான பூஜைகள் செய்யலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹார யாகசாலை பூஜையை மாலை 6.30 மணிக்கு மேல் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோவிலில் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்பு கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டு நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும்.

எனவே நண்பகல் 12.30 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் செல்ல அனுமதி இல்லை. சூரியகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு மேல் சம்ரோஷன பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 25-ந் தேதி நடை திறப்பில் மாற்றம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி 25ஆம் தேதி காலை வழக்கம் போல் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க தரிசனம் மற்றும் வழக்கமான கால பூஜைகள் நடைபெறும்.

பகல் 1 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்படும். பகல் 1 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவோ, கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாலை 4.30 மணிக்குஅக்னி தீர்த்த கடற்கரைக்கு சாமி எழுந்தருளி தீர்த்தவாரி பூஜை நடைபெற்று ரத வீதிகளில் வீதி உலா வந்த பின்னர் மீண்டும் மாலை 6.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

அதிகாலை 5 மணி முதல் 1 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடை சாத்தப்படும் வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது. எனவே சூரிய கிரகணத்தின் போது அண்ணாமலையார் கோவில் நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணத்தின் போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று  (அக்.25) தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் தொடங்கும் போது கோவில் வளாகத்தில் 4ஆம் பிரகாரத்தில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதே போல ஆந்திரா மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நாட்டிலுள்ள மிகப் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும். மேலும் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு, கேது க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள சிவன் சிலை அனைத்து 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 ராசிகளையும் உள்ளடக்கியது.

இதனாலேயே இந்த சிவனுக்கு சூரிய மண்டலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு கேது பரிகார தலமாக உள்ளது. எனவே கிரகணத்தால் கோவி லில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சூரிய, சந்திர கிரகணத்தன்று சிவபெருமானையும், ஞான பிரசுனாம்பா அம்பாளையும் வழிபட்டால், ஒரு நபர் அவர்க ளின் ஜாதக தோஷங்களிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top