Close
செப்டம்பர் 20, 2024 8:29 காலை

புதுக்கோட்டையில் பகுதி சூரிய கிரகணம்: பார்வையிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பகுதி சூரிய கிரகணம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது

புதுக்கோட்டையில் பகுதி சூரிய கிரகணத்தை மாணவர்கள் பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்தது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செஸ்டாட்ஸ் அமைப்பின்  சார்பில் இன்று நடைபெற்ற வானியல் நிகழ்வான பகுதி சூரிய கிரகணத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் சூரியக் கண்ணாடி மற்றும் இணையதள செயலி மூலமாக விளக்கினர். மாலை 5.00 மணி முதல் நடைபயிற்சியில் ஈடுபட்டோர், பயிற்சி மாணவர்கள், அறிவியல் இயக்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தெரிந்த பகுதி சூரிய கிரகணம்

பகுதி சூரிய கிரகணத்தை முழுமையாகக் காண இயலவில்லை. அதிக மேக மூட்டம் நிறைந்திருந்தது. இருப்பினும் இறுதி நேரத்தில் 5.30 மணிக்கு சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமிகு குமரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், செஸ்டாட்ஸ் ஒருங்கிணைப்பாளர் எல்.பிரபாகரன், மாவட்டத்தலைவர் எம்.வீரமுத்து, மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் கே.சதாசிவம், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், தமுஎகச நகரச் செயலாளர் பீர்முஹமது ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top