மேலைச்சிவபுரி கணேசர் கலை கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் கணேசர் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
இந் நிகழ்வில் கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் சன்மார்க்க சபை செயலாளர் சாமிநாதன், கல்லூரியின் முதல்வர் செல்வராசு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுக்கோட்டை மாவட்ட கிளை செயலாளர் ஜெ. ராஜா முகமது, புதுக்கோட்டை மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் கிஷோர் குமார், காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் மற்றும் கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் வே.அ.பழனியப்பன் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்
இரத்ததான முகாமில் கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர் கௌதம் மற்றும் மருத்துவர் பூபதி ராஜன் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.
இந்த ரத்ததான முகாமை கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யூத் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் முடியரசன் ஒருங்கிணைத்தார்.