Close
நவம்பர் 22, 2024 12:08 மணி

வெளிநாட்டில் வேலையா… விழிப்புடன் விசாரணை செய்ய அறிவுரை

புதுக்கோட்டை

வெளிநாட்டில் வேலை நாடுவோருக்கு எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களை விழிப்புடன் விசாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் 9600023645, 8760248625, 044-28515288 என்ற எண்களை தொடர்பு கொள்ள லாம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மார் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களில் ‘டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கட்டிங் எக்ஸிகி யூட்டிவ்” (Digital Sales and Marketing Executive) வேலை, ‘அதிக சம்பளம்” என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online scamming) போன்றவற்றில் கட்டாயப் படுத்தி ஈடுபடுத்துவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் பெறப்படுகிறது.

இனிவரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி என்ற விவரங்களை சரியாகவும், முழுமையா கவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியா விடில், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டும், பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும்.

ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அல்லது வேலைக்குச் செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் 9600023645, 8760248625, 044-28515288 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை: வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தைப் பற்றி விசாரித்து சரிபாருங்கள் என கூறி உள்ளது. தாய்லாந்து மோசடி ‘தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற தகவல் வெளியானது.

இது அவர்களது குடும்பங்களை பதற வைத்துது. இந்த மியாவாடி பகுதி, மியான்மர் அரசின் முழுமையான கட்டுப் பாட்டில் இல்லை. அங்கு சில இன ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

மியாவாடியில் சிக்கித் தவிக்கிறவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மத்திய அரசு எச்சரிக்கை இந்த விவகாரத்தில், வெளிநாட்டு வேலை என நம்பிச்செல்கிற வர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம்  அறிக்கை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் டிஜிட்டல் விற்பனை மற்றும் மார்க்கெட் டிங் அதிகாரிகள் பணியிடங்களில் அமர்த்துவதாகக்கூறி, இந்திய இளைஞர்களை கால்சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈர்த்து, வேலை மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவது பாங்காக் மற்றும் மியான்ம ரில் உள்ள இந்திய தூதரகங்கள் கவனத்துக்கு வந்துள்ளது .

இதில் தகவல் தொழில்நுட்பத்துறையில் திறன் மிக்கவர்கள், தாய்லாந்தில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை என கூறி சமூக ஊடக விளம்பரங்களாலும், துபாய் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஏஜெண்டுகள் மூலமாகவும் ஏமாற்றப்படுகிறார்கள்.

இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சட்ட விரோதமாக எல்லை தாண்டி பெரும்பாலும் மியான்மருக்கு அழைத்துச் செல்லப் பட்ட தாகவும், கடுமையான நிலைமைகளின் கீழ் பணிபுரிய அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு காரணங்களுக்காக சுற்றுலா/ விசிட் விசா வில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பாக, இந்திய குடிமக்கள் வேலைக்கு அமர்த்துகிற வெளிநாட்டு நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு ஏஜெண்டுகள் மூலமாக சரி பார்க்க வேண்டும்.

வேலை தருகிற எந்தவொரு நிறுவனத்தைப்பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும் அதில் ஏற்கெனவே வேலைக்கு சேர்ந்தவர்களை நாடி தகவல்களை சரிபார்க்க  வேண்டுமென  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top