Close
செப்டம்பர் 20, 2024 7:01 காலை

நல வாரியத்தில் அளிக்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 -ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்

ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் தொழிலாளர் சங்கத்தின் 22 ஆவது பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

தஞ்சையில் இன்று நடைபெற்ற உடல் உழைப்பு தொழிலாளர் சங்க 22 வது ஆண்டு பேரவை மாநாட்டில்  நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் 22 -ஆஆவது பேரவை  மாநாடு, மாவட்ட சங்க அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.  பேரவைக்கு  கே.எஸ்.முருகேசன், ஜி.பானுமதி, ஜி. கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் ஜி. மணி மூர்த்தி பேரவை கொடியினை ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை சங்கத் துணைத் தலைவர் எஸ்.பரிமளா வாசித்தார். சங்க துணை செயலாளர் வெ.சேவையா. பேரவையில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், தொழிலாளர் சங்கத்தின் 22 ஆவது பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் தி.கோவிந்தராஜன் முன்வைத்தார்.மாவட்ட பொருளாளர் பி.சுதா வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தஞ்சாவூர்
பேரவையில் பங்கேற்ற உறுப்பினர்கள்

மாநாட்டில், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன், போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், சுமை தூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் அ.சாமிக் கண்ணு, தெரு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். பி.முத்துக்குமரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன்.

டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், தலைவர் என்.இளஞ்செழியன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர் பி.செல்வம் உள்ளிட்டார் பேரவையை வாழ்த்தி பேசினார்கள். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் பேரவை மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  நலவாரியத்தில் பதிவு செய்து அறுபது வயது நிறைவடைந்த நாளிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் . கல்வி உள்ளிட்ட நல உதவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

.நல வாரியத்தில் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தை தற்போது உள்ள விலைவாசிக்கு ஏற்ப ரூபாய் 6000 மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் இ-ஷ்ராம் பதிவை தொழிலாளர் துறையே முன் நின்று பதிவு செய்வதை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, காப்பீட்டு திட்டம். பனிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top