Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

பழமுதிர்சோலையில் சஷ்டி திருவிழா கோலாகலம்

மதுரை

அழகர்மலையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் பங்கேற்ற பக்தர்கள்

மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் அமைய பெற்றுள்ளது.

இயற்கை எழில் நிறைந்த இந்தமுருகன் கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி பெருந் திருவிழா சிறப்புடையதாகும். இந்த திருவிழா வருகிற கடந்த 25-ஆம் தேதி காலையில் விக்னேஷ்வர பூஜை,யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.
அன்று காலையில் சண்முகாஅர்ச்சனையும், தொடர்ந்து, மஹா அபிஷேகமும், தீபாராதனையும், மேளதாளம் முழங்க அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.26-ஆம்  தேதி காமதேனு வாகனத்திலும், 27 -ஆம் தேதி யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் மாலையில் சண்முகா அர்ச்சனையும் நடைபெற்றது.
28ந் தேதி காலையில் ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மற்ற பூஜைகளும் நடைபெறும். 29 -ஆம் தேதி காலையில் சப்பர வாகனமும், பின்னர், வழக்கம் போல பூஜையும் நடந்தது.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று 30 -ஆம் தேதி காலையில் மஹா அபிஷேகத்துடன் தொடங்கியது. காலையில்  குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. மாலையில் வேல் வாங்குதல் நடைபெற்றது. பின்னர் 5.35 மணிக்கு சூரசம்ஹார விழா நடந்தது .
இதில், சுப்பிரமணிய சுவாமி வெள்ளி மயில்வாகனத்தில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி, திருக்கோவிலின் ஈசான திக்கில் வந்த கஜமுகா சூரனையும், அக்கினி திக்கில் வந்த சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்தார்.

தொடர்ந்து அங்குள்ள ஸ்தல விருட்ஷமான நாவல் மரத்தடி யில், பத்மா சூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. மாலையில் 6 மணிக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனையும். பின்னர் ஒளவைக்கு நாவல் கனி கொடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
31 -ஆம் தேதி இன்று காலையில் 12.10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், பகல் 1 மணிக்கு சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்களுடன் உற்சவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், திருப்பாவாடை தரிசனம், பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். இத்துடன்  திருவிழா நிறைவு பெற்றது.
ஏற்பாடுகளை, தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் இராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top