Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள்: மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு

மதுரை

மதுரை மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்த மேயர் இந்திராணி பொன்வசந்த்

மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.73 கோவலன் நகர், பாண்டியன் நகர், காந்திஜி தெரு, கென்னட் தெரு உள்ளிட்ட தெருக்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சாலைகள் அமைத்தல், பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய்கள், தெரு விளக்குகள், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மண்டலம் 5 கோவலன் நகர் பிரதான சாலையில் இருந்து சந்தானம் ரோடு வழியாக பாண்டியன் நகர், காந்திஜி தெரு, கென்னட் தெரு உள்ளிட்ட தெருக்களில் ரூ.4.98 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணியினை, மேயர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவர் சுவிதா, உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் ஜார்ஜ் செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.போஸ், தமிழ்செல்வி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top