Close
நவம்பர் 22, 2024 11:20 மணி

புதுக்கோட்டையில் நேரு யுவகேந்திரா சார்பில் தேச ஒற்றுமை நாள் ஓட்டம்… மாணவ மாணவிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை

தேசிய ஒற்றுமை நாள் ஓட்டத்தை தொடக்கி வைத்த நேரு இளையோர் மைய மாவட்ட அலுவலர் கே.ஜோயல் பிரபாகர்

புதுக்கோட்டை  மாவட்ட விளையாட்டு அரங்கில்  நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் (31.10.2022) தேச ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.

இந்திய நாட்டின் இரும்பு மனிதர் எனப் போற்றபடும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள். இந்த தினமானது தேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் நாட்டில் 75 ஆயிரம் இடங்களில் இன்று ஒற்றுமை ஓட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒற்றுமை ஓட்டமானது நடைபெற்றது.

இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
புதுக்கோட்டை ஆகிய அமைப்புகளின் சார்பில், சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டம் நடத்தப்பட்டது.

சுமார் 50 இளையோர் பங்கேற்ற இந்த ஒற்றுமை ஓட்டத்தை புதுக்கோட்டை முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு அரங்க வளாகத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளையோர் நல அலுவலர் குமரன்  முன்னிலையில். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர்  கே. ஜோயல் பிரபாகர் தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஒற்றுமை ஓட்டம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு மகளிர் கல்லூரி வழியாக பேருந்து நிலையம் வரை சென்று திரும்பி விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.

புதுக்கோட்டை

தேச ஒற்றுமை நாள் உறுதி ஏற்றுக் கொண்ட மாணவர்கள்

முன்னதாக ஒற்றுமை தின உறுதிமொழியை நேரு யுவகேந்திராவின் ஆர். நமச்சிவாயம் வாசிக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரமுத்து மாவட்ட விளையாட்டு அரங்க தடகள பயிற்றுனர் செந்தில் கணேஷ், சமூக சேவகர் மனோகரன் மற்றும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top