உள்ளாட்சி நாளையொட்டி(நவ.1) மதுரை மாநகராட்சி சார்பில் நகர சபைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு எண்.75 சுந்தரராஜபுரம்
வார்டு எண்.75 திடீர் நகர் சமுதாயக்கூடம் ஆகிய பகுதிகளில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நகர சபைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படுமென அறிவித்தார். அதன் படி, தமிழகத்தில் , தற்போது கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது போன்று முதல் முறையாக பேரூராட்சி சபை, நகரசபை மாநகர சபைக் கூட்டம் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் 10 இலட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகள் உருவாக்கப்பட்டு ஆண்டுக்கு 6 முறை நகர சபைக் கூட்டம் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறும் என தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் 10 வார்டு கமிட்டி உறுப்பினர்கள்
பகுதி சபா செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட பகுதி சபா செயலாளர்கள் வார்டு கமிட்டி உறுப்பினர்கள் தலைவர்கள் முன்னிலையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, இன்று மண்டலம் 3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு எண்.75 சுந்தரராஜபுரம் வார்டு எண்.76 திடீர் நகர் சமுதாயக்கூடம் ஆகிய பகுதிகளில் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நகர சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அப்பகுதி வார்டு மக்கள் சாலை வசதி குடிநீர் வசதி பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி கோரிக்கை அளித்ததன் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மண்டலம் 1 க்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் மண்டலம் 2 -க்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் மண்டலம் 3 -க்கு உட்பட்ட 19 வார்டுகளிலும் மண்டலம் 4 -க்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் மண்டலம் 5 -க்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் என மொத்தம் 100 வார்டுகளில் அந்தந்த பகுதி சபா செயலாளர்கள் வார்டு கமிட்டி உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் முஜிபூர்ரகுமான், உதவி ஆணையாளர்கள் மனோகரன், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள்,
மாமன்ற உறுப்பினர்கள், பகுதி சபா செயலாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.