Close
நவம்பர் 22, 2024 3:42 காலை

புதுக்கோட்டையில் கல்லறை திருநாள்… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற கல்லறை திருவிழா

கல்லறை திருநாள் என்பது சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கிறிஸ்தவர்களால் கடைப் பிடிக்கப்படுகிறது. கல்லறை திருநாளான (நவ.2) இன்று இறந்தவர்களின் புதுக்கோட்டையிலுள்ள கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.

கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்ல றைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக் குச் சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2- ஆம் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக் கப்படுகிறது.

மேலும், இந்தத் தினத்தையொட்டி புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் அசோக்நகர் அருகில் உள்ள கல்லறைத்தோட்டத் தில் புதன்கிழமை நடைபெற்ற கல்லறை திருவிழாவில் கிறிஸ்தவர்கள்  திரண்டு வந்து கல்லறையில் மெழுகு வர்த்தி  ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. கல்லறைகளைப் பார்ப்பதற்கு மக்கள்   காலை முதல் மாலை வரை வந்து செல்வார்கள் என்பதால் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இந்த நாளில்  ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்தவர்கள் பலர் உதவிகளைச் செய்வதும் வழக்கம். கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு தேவையான பூ, மாலை, ஊதுபத்தி போன்ற பொருட்கள் பெருமளவில் கல்லறை தோட்டத்துக்கு வெளியே விற்பனை செய்யப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top