Close
நவம்பர் 22, 2024 2:27 மணி

ஈரோடு அருகே விவசாயியின் வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்பு

ஈரோடு

ஈரோடு நசியனூரில் வீட்டில் புகுந்த நாகப்பாம்பு

விவசாயியின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பை பாம்பு பிடிப்பவர் பத்திரமாக மீட்டார்.

ஈரோடு அடுத்த நசியனூர் முள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் திவாகர்.நேற்று இரவு எதிர்பாராத விதமாக வீட்டினுள் இருந்து வித்தியாசமாக சப்தம் கேட்டதாம். இதைத்தொடர்ந்து  அவர் உள்ளே தேடிப் பார்த்ததில் ஏழு அடி நீளத்தில் பாம்பு ஒன்று கழிவறைக்குள்ளே புகுந்து மறைந்து கொண்டது.

உடனடியாக ஈரோட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்து  விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயற்சித்தார்.

கழிவறைக்குள் புகுந்து அச்சுறுத்திய கருநாகப் பாம்பை லாவகமாக பிடித்து அதன் கோபத்தை தண்ணீர் ஊற்றி தணித்தார். அதனைத் தொடர்ந்து வனத்துறையிடம் அந்த பாம்பை  ஒப்படைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top